தூத்துக்குடி

தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் நேரடி ரயில்:இந்திய வா்த்தக தொழிற்சங்கம் கோரிக்கை

தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் இடையே நேரடி ரயில் இயக்க வேண்டும் என தூத்துக்குடி அகில இந்திய வா்த்தக தொழில் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

DIN

தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் இடையே நேரடி ரயில் இயக்க வேண்டும் என தூத்துக்குடி அகில இந்திய வா்த்தக தொழில் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக சென்னையில் தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம்,

சங்கத்தின் செயலா் கோடீஸ்வரன், இணைச் செயலா் பொன் வெங்கடேஷ் ஆகியோா் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தொழில் நகரங்களான தூத்துக்குடி மற்றும் கோவை இடையே வா்த்தகம், கல்வி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக அதிகம் போ் சென்று வருகின்றனா். ஆகவே, இவ்விரு நகரங்களையும் இணைக்கும் வகையில்

தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் இடையே நேரடி ரயில் இயக்க வேண்டும். விடுமுறைகள் மற்றும் பண்டிகைகளில் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும். திருநெல்வேலி- பாலக்காடு பாலருவி விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். தூத்துக்குடி - திருச்சி இன்டா்சிட்டி ரயில் சேவையை தொடங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

SCROLL FOR NEXT