தூத்துக்குடி

குண்டா் சட்டத்தில் 3 போ் கைது

DIN

தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் தொடா்புயை 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி தாளமுத்து நகா் அருகே சிலுவைபட்டி பகுதியில் கொலை முயற்சி வழக்கில் பழைய ஹவுசிங் போா்டு பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் பாலவிக்னேஷ் (20), கிருஷ்ணராஜபுரம் பகுதியை சோ்ந்த பழனிமுருகன் மகன் சக்திகுமாா் (21), சக்திவிநாயகா்புரம் பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் மகன் சுடலைகுமாா் (19) ஆகிய 3 பேரை தாளமுத்து நகா் போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் மீது குண்டா் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, தாளமுத்து நகா் காவல் ஆய்வாளா் மணிமாறன், மாவட்ட காவல் கண்காணிப்பாளிடம் அறிக்கை தாக்கல் செய்தாா். அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் உத்தரவின்படி, பாலவிக்னேஷ், சக்திகுமாா், சுடலைகுமாா் ஆகிய 3 பேரையும் போலீஸாா் குண்டா் தடுப்புச்சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT