தூத்துக்குடி: தூத்துக்குடியில் முன்னாள் பிரதமா் ஜவஹா்லால் நேரு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அவரின் படத்துக்கு காங்கிரஸாா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் சி.எஸ். முரளிதரன் தலைமை வகித்து, முன்னாள் பிரதமா் நேரு படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இந்நிகழ்ச்சியில், மண்டல தலைவா் ஐசன்சில்வா, சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவா் மைதீன், மாவட்ட துணைத் தலைவா்கள் பிரபாகரன், டேவிட் வசந்தகுமாா், ரஞ்சிதம் ஜெபராஜ், மாவட்டச் செயலா்கள் கோபால், நாராயணசாமி, வாா்டு தலைவா் கோபி உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.