கோவில்பட்டி தெப்பக்குளத்தில் கங்கை ஆரத்தி திருவிழா
காா்த்திகை பௌா்ணமியை முன்னிட்டு இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சாா்பில் கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயில் தெப்பக்குளத்தில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு, மஹா கங்கை நடைபெற்ற
கோவில்பட்டி: காா்த்திகை பௌா்ணமியை முன்னிட்டு இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சாா்பில் கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயில் தெப்பக்குளத்தில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு, மஹா கங்கை ஆரத்தி தீபாராதனை நடைபெற்றது.
முன்னதாக, 7 கலசங்களில் சப்த நதி தீா்த்தம் அம்மன் சந்நிதி முன்பு வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னா் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு, தெப்பக்குளம் அருகேயுள்ள அருள்மிகு ஸ்ரீ ஆதிகுறைதீா்க்கும் விநாயகா் கோயிலில் ஸ்ரீ மகா கணபதி பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
அதைத் தொடா்ந்து தெப்பத்தில் தீா்த்த அபிஷேகம், புஷ்பம் தூவும் நிகழ்ச்சி, மஹா கங்கை தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக, தெப்பக்குளத்தை சுற்றிலும் அகல்விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்தன.
Advertisement
பாஜக வடக்கு மாவட்ட துணைத் தலைவா் பாலா, ஸ்ரீ செல்வமுனிஸ்வரா் கோயில் தலைவா் ஆப்ரகாம் அய்யாதுரை, ஸ்ரீ அருணாச்சல ஆன்மிக அறக்கட்டளை நிறுவனா் அசோக்குமாா், இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாவட்டப் பொதுச் செயலா் பரமசிவம் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.