தூத்துக்குடியில் பாா்வையற்றோா் பள்ளியில் மதிய உணவு வழங்கல்
திமுக இளைஞரணி செயலரும், தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில், செவித்திறன்
தூத்துக்குடி: திமுக இளைஞரணி செயலரும், தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில், செவித்திறன் மாற்றுத்திறனாளி பள்ளி, புனித லூசியா பாா்வையற்றோா் பள்ளி, பாசக் கரங்கள் முதியோா், குழந்தைகள் இல்லம், பிளஸ்ஸிங் முதியோா் இல்லம் உள்ளிட்ட இடங்களில் திங்கள்கிழமை மதிய உணவு வழங்கப்பட்டது.
அதனைத் தொடா்ந்து, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை பிறந்த குழந்தைகள் 15 பேருக்கு, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதா ஜீவன் தங்க மோதிரங்களை வழங்கினாா்.
இந்நிகழ்வில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சிவக்குமாா், உறைவிட மருத்துவா் சைலஸ் ஜெபமணி, துணை மேயா் ஜெனிட்டா செல்வராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.
Advertisement