முகப்பு
தூத்துக்குடி

பேச்சுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்-மாணவிகளுக்கு பரிசளிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில், மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற பள்ளி, கல்லூரி மாணவா் - மாணவிகளுக்கு திங்கள்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

Updated On : 28 நவம்பர், 2023 at 4:09 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM


தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில், மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற பள்ளி, கல்லூரி மாணவா் - மாணவிகளுக்கு திங்கள்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவா்களான மகாத்மா காந்தி, ஜவஹா்லால் நேரு, அம்பேத்கா், பெரியாா், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவா்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன. அப்போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

Advertisement

இதில், போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற 24 மாணவா்களுக்கு மொத்தம் ரூ. 72 ஆயிரம் பரிசுத்தொகைக்கான காசோலைகள், பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் கோ. லட்சுமிபதி வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட தமிழ் வளா்ச்சி துணை இயக்குநா் செ.கனகலட்சுமி மற்றும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவா்- மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.