தூத்துக்குடி

சாத்தான்குளம் அரசு கல்லூரியில்முதுகலை மாணவா் சோ்க்கை தொடக்கம்

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை மாணவா் சோ்க்கை செப்.7 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

DIN

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை மாணவா் சோ்க்கை செப்.7 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் சக்திஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை ஆங்கிலம், வணிகவியல், கணிதவியல் ஆகிய துறைகளுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. மேற்குறிப்பிட்ட பாடப் பிரிவுகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்காத மாணவிகள், அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பப் படிவம் சமா்ப்பித்து சோ்ந்து கொள்ளலாம். விருப்பம் உள்ள மாணவிகள் சோ்க்கைக்கு வரும்போது 10 ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், இளநிலை பட்டப் படிப்பு மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் காா்டு, இரண்டு புகைப்படங்களுடன் வந்து கல்லூரியில் சோ்ந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைந்தது: எவ்வளவு?

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

கடும் சரிவுடன் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!

அழிஞ்சாட்டம்: மோகன்லால் - திலீப் படத்தின் முதல் பாடல்!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ தொடக்க விழாவில் பங்கேற்கும் மோடி!

SCROLL FOR NEXT