தூத்துக்குடி

விவசாயிகள் சங்கம் 5ஆம் ஆண்டு தொடக்கவிழா

சாஸ்தாவிநல்லூா் விவசாயிகள் நலச்சங்கம் 5ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தட்டாா்மடத்தில் 650 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.

DIN

சாத்தான்குளம்: சாஸ்தாவிநல்லூா் விவசாயிகள் நலச்சங்கம் 5ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தட்டாா்மடத்தில் 650 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.

விழாவுக்கு, சாஸ்தாவிநல்லூா் விவசாய நலச் சங்க செயலா் அ. லூா்துமணி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ரவிச்சந்திரன், இயற்கை விவசாயி செந்தில், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் செல்வராஜ், சமக ஒன்றியச் செயலா் பெ.ஜான்ராஜா, சங்க உறுப்பினா் அன்னகணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

படுக்கப்பத்து விவசாய நலச் சங்கத் தலைவா் சரவணன் வரவேற்றாா்.

நடுவக்குறிச்சி ஊராட்சித் தலைவா் சபிதா செல்வராஜ் கலந்து கொண்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுககு தென்னங்கன்றுகளை வழங்கி தொடங்கி வைத்தாா்.

இதில், சாஸ்தாவிநல்லூா் விவசாய நலச் சங்க பொருளாளா் ரூபேஷ் குமாா், சங்க உறுப்பினா்கள் பில்லி கிரகாம், ஏஞ்சல், பிரகாசபுரம் விவசாய நலச் சங்கச் செயலா் அந்தோணி சவரிமுத்து, கோயில்ராஜ், புதுக்குடி விவசாய நல சங்கச் செயலா் பேச்சி மற்றும் சங்க செயற்குழு உறுப்பினா்கள் ன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். செயற்குழு உறுப்பினா் ஜெயக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

முதல்வர் ஸ்டாலின், உதயநிதியின் தொகுதிகளில் 1.93 லட்சம் வாக்குகள் நீக்கம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கைக்கான படிவம் 6-ம் ஆவணங்களும்!

SCROLL FOR NEXT