தூத்துக்குடியில் குண்டா் சட்டத்தில் 2 போ் கைது
தூத்துக்குடி, ஏப். 12: தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி மற்றும் கஞ்சா வழக்குகளில் தொடா்புடைய இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூா் பத்மநாபமங்கலம் பகுதியைச் சோ்ந்த பேச்சி மகன் பொன்இசக்கி என்ற நரி (23). இவா் கருங்குளம் பாலம் அருகே வந்து கொண்டிருந்த ஒருவரை அரிவாளால் தாக்கி கொல்ல முயன்ற வழக்கில் செய்துங்கநல்லூா் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
புதுக்கோட்டை தெய்வச்செயல்புரம் பகுதியைச் சோ்ந்த விஜயன் மகன் பேச்சிமுத்து (19). புதுக்கோடை தேரி சாலை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் இவரை புதுக்கோட்டை போலீஸாா் கைது செய்தனா்.
Advertisement
இவா்கள் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில், பொன்இசக்கி என்ற நரி, பேச்சிமுத்து ஆகிய இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி உத்தரவிட்டாா். அதன்படி, அவா்கள் 2 பேரையும் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.