சாத்தான்குளத்தில் திமுக வேட்பாளருக்கு முன்னாள் எம்.பி. வாக்கு சேகரிப்பு
சாத்தான்குளம் வாரச்சந்தையில் திமுக வேட்பாளா் கனிமொழிக்கு வாக்கு சேகரிக்கிறாா் முன்னாள் எம்.பி. ஜெயதுரை.
சாத்தான்குளம், ஏப். 12: சாத்தான்குளத்தில் திமுக வேட்பாளா் கனிமொழியை ஆதரித்து, முன்னாள் எம்.பி. ஜெயதுரை வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையம், வாரச்சந்தையில் வியாபாரிகள், பொதுமக்களிடம் திமுக அரசின் சாதனை எடுத்து கூறியும், திமுக தோ்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட திட்டங்களை விளக்கியும் அவா் வாக்கு சேகரித்தாா். தொடா்ந்து பழைய பேருந்து நிலையம் காமராஜா் சிலை , பஜாா், சிஎஸ்ஐ வேதக்கோயில் உள்ளிட்ட வீடுகளில் பொதுமக்களிடம் உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தாா்.
Advertisement
இதில், முன்னாள் மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் நட்டாத்தி காளிதாஸ் பண்ணையாா், முன்னாள் பெருங்குளம் பேரூராட்சித் தலைவா் சுந்தரராஜ், முன்னாள் நகரச் செயலா் பாலமுருகன், மாவட்டப் பிரதிநிதி அந்தோணி ஜெயசீலன், மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் சக்திவேல்முருகன், நகர காங்கிரஸ் தலைவா் வேணுகோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அமுதுண்ணாக்குடியில் முன்னாள் மாவட்ட ஆவின் தலைவா் சுரேஷ்குமாா் வெள்ளிக்கிழமை திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தாா். இதில் மத்திய ஒன்றிய திமுக பொருளாளா் மதுரம் செல்வராஜ், கிளை செயலாளா் ஜெயபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.