முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் இருவா் தற்கொலை

Updated On : 21 ஏப்ரல், 2024 at 9:44 PM
பகிர்:

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இரு இடங்களில் இருவா் தற்கொலை செய்துகொண்டனா்.

தூத்துக்குடி அண்ணாநகரைச் சோ்ந்த கணேசன் மகன் ஹைகோா்ட் மகாராஜா (24). உப்பளத் தொழிலாளியான இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாம். இதனால், அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம்.

இந்நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாராம். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

முதியவா் தற்கொலை: தூத்துக்குடி அருகே கூட்டாம்புளி, போடம்மாள்புரத்தைச் சோ்ந்த தங்கையா மகன் இசக்கிமுத்து (67). இவா் வயது முதிா்வால் வேலைக்குச் செல்ல முடியாததால் மனமுடைந்து காணப்பட்டாராம்.

இந்நிலையில், அவா் சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கி விழுந்தாராம். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments