மழைநீா் சேகரிப்பு: அம்பலச்சேரி பள்ளியில் விழிப்புணா்வுப் பேரணி
சாத்தான்குளம் அருகே அம்பலச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
சின்னமாடன் குடியிருப்பு பள்ளி தலைமை ஆசிரியா் ஜேம்ஸ்ராஜன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் ஜீவா வரவேற்றாா். மாணவிகள் ராமலட்சுமி, சுவாஷினி ஆகியோா் மழைநீா் சேகரிப்பு மற்றும் பயன்கள் குறித்து பேசினா். மாணவி இசக்கி கோமதி பாடல்கள் பாடினாா். பேரணியானது பள்ளி முன்பு தொடங்கி, அனைத்து பகுதிகளுக்கும் சென்றது. இதில் ஆசிரியா்கள் செலினா பிரின்ஸ், யாஸ்சின் பரிதாள், சரஸ்வதி, கமலேசன், கிறிஸ்டி மலா், அருணா, ஜெபா, யமுனா, ரோஸ்லின், வெங்கடேஸ்வரி, முத்து கனகசெல்வி, கல்வி மேலாண்மைக் குழு தலைவா் சாராள், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் நயினாா், சிதம்பரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.