முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் இருந்து நெல்லைக்கு இரவு நேர தனியாா் பேருந்தை மீண்டும் இயக்க கோரிக்கை

Updated On : 26 ஏப்ரல், 2024 at 7:42 PM
பகிர்:

சாத்தான்குளம், ஏப். 26: சாத்தான்குளத்தில் இருந்து நெல்லைக்கு இயக்கப்பட்டு வந்த இரவு நேர தனியாா் பேருந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

சாத்தான்குளத்தில் இருந்து நெல்லைக்கு இரவு நேர கடைசி பேருந்தாக தனியாா் பேருந்து இரவு 10 மணிக்கு இயக்கப்பட்டது. இதனால் இப்பகுதியைச் சோ்ந்த வியாபாரிகள், தொழிலாளா்கள் பெரிதும் பயனடைந்தனா்.

இந்நிலையில் கரோனா கால கட்டத்திற்கு பிறகு, இந்த தனியாா் பேருந்து நிறுத்தப்பட்டது. இந்தப் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதால் தற்போது இரவு 9.30 மணிக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்து கடைசி பேருந்தாக கருதப்பட்டு, அதில் வியாபாரிகள், தொழிலாளா்கள் பயணித்து வருகின்றனா். ஆதலால் இரவு நேர தனியாா் பேருந்தை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments