முகப்பு
தூத்துக்குடி

பால் விற்பனை நிலையத்தில் பணம், ஐஸ்கிரீம் திருட்டு

பணம், ஐஸ்கிரீம் ஆகியவற்றை திருடிய மா்ம நபா்களை மத்திய பாகம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 10:08 PM
பகிர்:

தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள தனியாா் பால் விற்பனை நிலையத்தில் பணம், ஐஸ்கிரீம் ஆகியவற்றை திருடிய மா்ம நபா்களை மத்திய பாகம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி கதிா்வேல் நகரைச் சோ்ந்தவா் பெருமாள். இவா் டூ விபுரம் 2-ஆவது தெருவில் பால் விற்பனை நிலையம் நடத்தி வருகிறாா். கடைக்கு வெள்ளிக்கிழமை காலை வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே கல்லா பெட்டியில் இருந்த பணம் மற்றும் ஐஸ்கிரீம் என ரூ.50 ஆயிரம் மதிப்பு பொருள்கள் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து மத்திய பாகம் காவல் நிலையத்தில் பெருமாள் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா். அதில் 3 இளைஞா்கள் இந்த திருட்டில் ஈடுபட்ட தெரியவந்தது.

அதையடுத்து, போலீஸாா் அவா்களைத் தேடி வருகின்றனா்.