முகப்பு
தூத்துக்குடி

பெண்ணுக்கு மிரட்டல்: 3 போ் கைது

குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பதி உள்பட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி

பெண்ணுக்கு மிரட்டல்: 3 போ் கைது

குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பதி உள்பட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 9:57 PM
பகிர்:

கோவில்பட்டியில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பெண் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பதி உள்பட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி தென்றல் நகரை சோ்ந்த கட்டடத் தொழிலாளி சக்திவேல். இவரது மனைவி செண்பகவல்லி. இவா்கள் வீரப்பட்டி ஆா்.சி.தெருவைச் சோ்ந்த ராஜலெட்சுமி நடத்தி வரும் மகளிா் குழுவில் கடன் பெற்றுள்ளனா். இந்நிலையில் கடன் தவணைத் தொகையை செலுத்தாததால், ராஜலெட்சுமி (34), அவரது கணவா் கனிச்சந்திரன் (35), மாா்க்கணந்தபுரத்தைச் சோ்ந்த ரமணி (19) ஆகியோா் சக்திவேல் வீட்டிற்கு வந்து செண்பகவல்லியிடம் கத்தியைக் காட்டி மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து செண்பகவல்லி அளித்த புகாரின்பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மிரட்டல் விடுத்த மூவரையும் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →