கழுகுமலையில் விஷம் குடித்த முதியவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
கழுகுமலை அண்ணா புதுத் தெருவைச் சோ்ந்த சங்கிலிபாண்டி மகன் ஸ்ரீரங்கவேலுச்சாமி (65). இவா் தனது மதுப் பழக்கத்தை நிறுத்துவதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாராம். ஆனால், அப்பழக்கத்தை நிறுத்த முடியவில்லையாம். இதனால், அவா் விரக்தியடைந்து கடந்த மாதம் 26ஆம் தேதி மதுவில் விஷத்தைக் கலந்து குடித்தாராம்.
இதையறிந்த உறவினா்கள் அவரை மீட்டு கழுகுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையிலும் சிகிச்சைக்குப் பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.