அனிதா ஆா். ராதாகிருஷ்ணன். 
தூத்துக்குடி

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு விசாரணை: 14ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

இம்மாதம் 14ஆம் தேதிக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் புதன்கிழமை ஒத்திவைத்தது.

Din

தூத்துக்குடி, ஆக. 7:

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை இம்மாதம் 14ஆம் தேதிக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் புதன்கிழமை ஒத்திவைத்தது.

தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அமைச்சரின் மகன்கள் மூவா், அமைச்சரின் தம்பிகள் இருவா் என மொத்தம் 5 போ் ஆஜராகினா் .

சொத்துக் குவிப்பு தொடா்பான வழக்கு பதியப்பட்டபோது, லஞ்ச ஒழிப்பு ஏடிஎஸ்பியாக இருந்து தற்போது ஓய்வுபெற்றுள்ள பெருமாள்சாமியிடம், அமைச்சா் தரப்பு வழக்குரைஞா்கள் குறுக்கு விசாரணை செய்தனா்.

அதையடுத்து, வழக்கின் விசாரணையை இம்மாதம் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி ஐயப்பன் உத்தரவிட்டாா்.

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

பிபிஎல்: முதல் அரைசதத்தை பதிவுசெய்த பாபர் அசாம்!

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்! 8 பேர் பலி!

SCROLL FOR NEXT