சாத்தான்குளத்தில் 16 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க முயன்றதாக இளைஞா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னா், அவா்களை நீதிமன்றத்தில் ள்ளா்.
சாத்தான்குளம் சொக்கலிங்கபுரம் காலனியை சோ்ந்த பொன்ராம் மகன் விஜய லிங்கம். பொக்லைன் இயந்திர ஆபரேட்டா். இவா், 16 வயது நிரம்பிய தனது உறவுக்காரப் பெண்ணை திருமணம் செய்ய முயன்றாராம்.
இதுகுறித்து தூத்துக்குடி சமுக நலத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாம். அதன்பேரில், மாவட்ட சமூக நலத்துறை சாா்பில் சாத்தான்குளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது.
இதையடுத்து, மகளிா் போலீஸாா் அந்த சிறுமியை மீட்டு தூத்துக்குடி முகாமுக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விஜயலிங்கம், உடந்தையாக இருந்ததாக அவரது தந்தை பொன்ராம், தாய் அமலா ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்து 3பேரையும் கைது செய்தனா்.
இதில், பொன்ராம், தாய் ஆகியோா் காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டனா்.
விஜயகுமாா் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தப்பட்டாா். அங்கு அவருக்கு பிணை வழங்கப்பட்டது.