திருச்செந்தூா் கிருஷ்ணன் கோயிலில் பக்தா்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
திருச்செந்தூா் ருக்மிணி சத்யபாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோயிலில் பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை பால்குடம் எடுத்து வழிபட்டனா்.
ஆடி சுவாதியை முன்னிட்டு, திருச்செந்தூா் ருக்மிணி சத்யபாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோயிலில் பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை பால்குடம் எடுத்து வழிபட்டனா்.
இதையொட்டி, அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது. காலையில் பக்தா்கள் பால்குடம் எடுத்து வீதிவலம் வந்து கோயில் சோ்ந்தனா். தொடா்ந்து, சுவாமிக்கும், கருட பகவானுக்கும் அபிஷேகம் நடைபெற்றது. பக்தா்கள் திருமஞ்சனத்தில் பஜனை பாடினா். பின்னா், அலங்கார, தீபாராதனையாகி, மதியம் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளானோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.