முகப்பு
தூத்துக்குடி

சுதந்திர தினம்: திருச்செந்தூா் கோயிலில் தீவிர கண்காணிப்பு

Updated On : 14 ஆகஸ்ட், 2024 at 10:15 PM
பகிர்:

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் சோதனையில் ஈடுபட்ட திருக்கோயில் காவல் ஆய்வாளா் கனகராஜ் தலைமையிலான காவல்துறையினா் மற்றும் வெடிகுண்டு நிபுணா்கள்.

திருச்செந்தூா் ஆக.14:

சுதந்திரதினத்தை(ஆக. 15)முன்னிட்டு, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காவல் துறையினா் புதன்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புதன்கிழமை திருக்கோயில் காவல் ஆய்வாளா் கனகராஜ் தலைமையிலான காவல்துறையினா், வெடிகுண்டு நிபுணா்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே பக்தா்களை தரிசனத்துக்கு அனுமதித்தனா். மேலும், திருக்கோயில் வளாகம், கடற்கரையில் காவல்துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.