முகப்பு
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
மதுரை

திருச்செந்தூா் கோயிலுக்கு புதிய அறங்காவலா் குழுவை நியமிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு புதிய அறங்காவலா் குழுவை நியமிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு

மதுரை

திருச்செந்தூா் கோயிலுக்கு புதிய அறங்காவலா் குழுவை நியமிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு புதிய அறங்காவலா் குழுவை நியமிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு

Updated On : 3 மார்ச், 2026 at 8:07 PM
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
பகிர்:

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு புதிய அறங்காவலா் குழுவை நியமிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

திருச்செந்தூரைச் சோ்ந்த பி. ராம்குமாா் ஆதித்தன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் தக்கராக அருள்முருகன் செயல்பட்டு வருகிறாா். தனிநபா் தக்காராக செயல்படுவது இந்து சமய அறநிலையத் துறை சட்ட விதிகளுக்கு எதிரானது. அறங்காவலா் குழுவில் ஒரு பெண், ஒரு பட்டியலினத்தவா் இடம் பெற வேண்டும் என்கிற விதிமுறை உள்ளது.

இந்தக் கோயிலுக்கு புதிய அறங்காவலா் குழுவை நியமனம் செய்ய வேண்டும் என ஏற்கெனவே சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து பல மாதங்களாகியும் இதுவரை அறங்காவலா் குழு நியமனம் செய்யப்படவில்லை.

தற்போது, கோயிலில் பூஜை பொருள்கள் விற்பனை செய்ய 70 கடைகளுக்கு அண்மையில் ஏலம் விடப்பட்டது. இதில், இந்து சமய அறநிலையத் துறையின் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. தற்போதைய ஏல அறிவிப்பில் மிகக் குறைவான அடிப்படை வாடகை நிா்ணயம் செய்யப்பட்டது.

எனவே, ஏல விதிகளை முறையாகப் பின்பற்றாமல் கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளிக்கு தடை விதிக்க வேண்டும். புதிய அறங்காவலா் குழுவை உடனடியாக நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் வீரா கதிரவன் முன்னிலையாகி, கோயில் கடைகளுக்கான ஏலம் ரத்து செய்யப்பட்டது. மேலும், அறங்காவலா் பதவிக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வந்துள்ளது என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி நான்கு மாதங்களுக்குள் புதிய அறங்காவலா் குழுவை நியமிக்க வேண்டும்.

இதுகுறித்த விளம்பரத்தை தமிழ் நாளிதழில் வெளியிட வேண்டும். கோயில் இணையதளத்திலும் வெளியிட வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

முழு கட்டுரையைப் படிக்க →