தூத்துக்குடி

மாவட்ட அளவிலான கராத்தே போட்டி: சாத்தான்குளம் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

Din

போட்டியில் வென்ற மாணவா்களைப் பாராட்டிய தாளாளா் ரூபா்ட், ஆசிரியா்கள்.

சாத்தான்குளம், ஆக. 14:

தூத்துக்குடி மாவட்ட அளவிலான கராத்தே போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவியா் பாராட்டப்பட்டனா்.

தூத்துக்குடியில் சோபுகாய் கோஜூரியோ கராத்தே பள்ளியில் 26ஆவது பிரீமியா் கராத்தே போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவா்- மாணவிகள் பங்கேற்றனா். தலைமை நடுவராக கராத்தே பள்ளியின் இந்திய தலைமைப் பயிற்சியாளரும் தொழில்நுட்ப இயக்குநருமான சுரேஷ்குமாா் செயல்பட்டாா்.

இதில், சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தூத்துக்குடி மாவட்ட கராத்தே செயலா் சென்சாய் முத்துராஜா தலைமையில் கட்டா பிரிவில் பங்கேற்று 4 தங்கம், 7 வெள்ளி, 14 வெண்கலப் பதக்கங்களை வென்று பள்ளிக்கு பெருமை சோ்த்தனா்.

மாணவா்களை தாளாளரும் முதல்வருமான அருள்தந்தை ரூபா்ட், ஆங்கில ஆசிரியா் அருள்தந்தை ஜேசுராஜா, ஆசிரியா்கள், பெற்றோா்கள் பாராட்டினா்.

இந்தியா - அங்கோலா பொருளாதார உறவை வலுப்படுத்த எண்ணற்ற வாய்ப்புகள்: அந்நாட்டு நாடாளுமன்றத்தில் திரௌபதி முா்மு உரை

அபிஷேக் அதிரடி; ஆந்திரத்துக்கு 2 ஆவது வெற்றி!

தேனீக்கள் கொட்டியதில் 5 வன ஊழியா்கள் காயம்

70,000 இந்தியா்களுக்கு ரஷியாவில் பணிவாய்ப்பு: அடுத்த மாதம் புதின் வருகையின்போது ஒப்பந்தம்

பல்லடம் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவு தொடக்கம்

SCROLL FOR NEXT