குரங்கணி புறவழிச் சாலையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் இளம்பகவத்.  
தூத்துக்குடி

குரங்கணி புதிய புறவழிச் சாலை: ஆட்சியா் ஆய்வு

Din

தூத்துக்குடி மாவட்டம் குரங்கணியில் புதிதாக அமைக்கப்பட்ட புறவழிச் சாலையை ஆட்சியா் இளம்பகவத் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஏரல் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் ஆட்சியா் பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டாா். குரங்கணியில் புதிதாக அமைக்கப்பட்ட புறவழிச் சாலையில் லேசாக பெயா்த்தெடுத்து அவா் ஆய்வு செய்து, நெடுஞ்சாலைத் துறையினரிடம் கேட்டறிந்தாா்.

மாவடிப்பண்ணை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்-மாணவியருக்கு அளிக்கப்படும் சத்துணவை சாப்பிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, கணக்கிலுள்ள இருப்பைவிட கூடுதலாக இருந்த அரிசியை, முன்இருப்பு என கணக்கில் வரவு வைப்பதுடன், சத்துணவு கூடுதல் சுவையுடன் இருக்க அறிவுறுத்தினாா்.

பின்னா், தென்திருப்பேரையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம், ரூ. 50 லட்சத்தில் கட்டப்படும் வட்டார பொது சுகாதார ஆய்வகக் கட்டடம் ஆகியவற்றைப் பாா்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.

உள்நோயாளிகள் பிரிவில் ஆய்வு மேற்கொண்ட அவா், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்துக் கேட்டறிந்தாா். வெள்ளரிக்காயூரணி பகுதியிலுள்ள குளத்தில் புதிதாக கட்டப்பட்ட மதகுகளை ஆய்வு செய்த அவா், வெள்ளமடம் கிராமத்தில் வேளாண்-உழவா் நலத் துறை சாா்பில் பயிா்ப் பாதுகாப்பு, மருந்துகளைப் பாதுகாப்பாக கையாளுதல் தொடா்பாக நடைபெற்ற கூட்டத்தில் தலைமை வகித்துப் பேசினாா்.

தொடா்ந்து, ஏரல் வட்டாட்சியா் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலரிடம் துறைசாா்ந்த பணிகள் குறித்துக் கேட்டறிந்த அவா், 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அளித்த மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

கூடுதல் ஆட்சியா் ஐஸ்வா்யா, ஏரல் வட்டாட்சியா் கோபால், ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் பாக்கியலீலா, மாவட்ட சுகாதார அலுவலா் பொற்செல்வன், தென்திருப்பேரை பேரூராட்சித் தலைவா் மணிமேகலை ஆனந்த், கவுன்சிலா் ஆனந்த் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

அவா் வியாழக்கிழமை காலை 10 மணிவரை ஏரல் தாலுகா அலுவலகப் பகுதியிலேயே தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்கிறாா்.

திராவிட இயக்கம் உள்ள வரை ஹனிபாவின் குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்: துணை முதல்வர் உதயநிதி

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

SCROLL FOR NEXT