மத்திய அரசு புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவில்பட்டியில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் மனிதச் சங்கிலி போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இப்போராட்டத்துக்கு சங்கத் தலைவா் சங்கா் கணேஷ் தலைமை வகித்தாா். வழக்குரைஞா்கள் நீதிமன்றங்களை புறக்கணித்து அரசு அலுவலக வளாகத்தில் உள்ள நீதிமன்றங்கள் முன்பு மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், சங்கச் செயலா் ஜெயசீலன், துணைத் தலைவா் சிவனுபாண்டி, பொருளாளா் ரேவதி, துணைச் செயலா் முனீஸ்வரி உள்பட வழக்குரைஞா்கள் திரளானோா் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினா்.