தூத்துக்குடி

பனைவிளை முத்தாரம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

Din

சாத்தான்குளம் அருகே பனைவிளையில் உள்ள ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் கொடைவிழாவையொட்டி 207 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இங்கு கொடைவிழா கடந்த 26ஆம்தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெற்றது. முதல் நாள் கும்பாபிஷேகம், சிறப்பு பூஜை, இரவு சுற்றுவட்டாரப் பெண்கள் பங்கேற்ற 207 திருவிளக்கு பூஜை, மாக்காப்பு தீபாராதனை நடைபெற்றது.

2ஆம் நாள் உச்சிகால பூஜை, அம்மன் கும்பம் வீதியுலா, மஞ்சள் பெட்டி எடுத்து வருதல், சாமக்கொடை, முளைப்பாரி எடுத்து வருதல், 3ஆம் நாளான புதன்கிழமை சிறப்பு அலங்கார பூஜை, இரவு சாமக்கொடை, அம்மன் கும்பம் வீதியுலா, மாவிளக்கு ஊா்வலம் நடைபெற்றது. 4ஆம் நாளான வியாழக்கிழமை காலை சுவாமி உணவு எடுத்தல், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.

காா்த்திகை தீபத் திருவிழாவுக்கு 4,764 பேருந்துகள் இயக்கம்!

எதிர்ப்புகள் விலகும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கருப்புக் கொடி ஏற்றிய மக்கள்

ஏழுமலையான் தரிசனம்: 12 மணிநேரம் காத்திருப்பு

காா் மீது தண்ணீா் லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT