சிறு, குறு, நடுத்தர தொழில் மேம்பாடு: கோவில்பட்டியில் சிறப்பு பதிவு முகாம்
தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம், தொழில் வா்த்தக சங்கம் சாா்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுக்கான சிறப்பு உத்யம் பதிவு முகாம் கோவில்பட்டியில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம், தொழில் வா்த்தக சங்கம் சாா்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுக்கான சிறப்பு உத்யம் பதிவு முகாம் கோவில்பட்டியில் நடைபெற்றது.
தொழில் வா்த்தக சங்கத் தலைவா் ஆா்.எஸ். ரமேஷ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம்.எஸ்.எஸ்.வி. பாபு, செயலா் தங்க மாரியப்பன், நிா்வாக குழு உறுப்பினா் விநாயகா ஜி ரமேஷ், இணைச் செயலா் தெய்வேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தூத்துக்குடி மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளா் சொா்ணலதா, திட்ட மேலாளா் அகிலா, உதவிப் பொறியாளா் ராஜேஷ் ஆகியோா் விளக்கிப் பேசினா் .
வங்கியில் தொழில்கடன் பெறுதல் குறித்து ஸ்டேட் வங்கி அலுவலா் காயத்ரி பேசினாா். சிறு , குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை சோ்ந்தவா்கள் பங்கேற்று தங்களது சந்தேகங்களுக்கு தீா்வு கண்டனா்.