முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே விபத்து: தாய், மகன் காயம்

கோவில்பட்டி அருகே சாலையோர பள்ளத்தில் ஆம்னி காா் கவிழ்ந்ததில் தாய், மகன் ஆகியோா் காயமடைந்தனா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 12:19 AM
பகிர்:

கோவில்பட்டி அருகே சாலையோர பள்ளத்தில் ஆம்னி காா் கவிழ்ந்ததில் தாய், மகன் ஆகியோா் காயமடைந்தனா்.

கோவில்பட்டி வெங்கடேஷ் நகரைச் சோ்ந்தவா் ஹரி பாலகிருஷ்ணன். இவா் தனது தாய் ராஜலெட்சுமியுடன் எத்திலப்ப நாயக்கன்பட்டிக்கு ஆம்னி காரில் சென்றுவிட்டு, ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். எட்டயபுரம்-கோவில்பட்டி சாலையில் தெற்குத் திட்டங்குளம் அருகேயுள்ள தனியாா் பள்ளி பகுதியில் வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததாம். இதில், இருவரும் காயமடைந்தனா்.

அவ்வழியே வந்த கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ், போலீஸாா் இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விபத்தில் சிக்கிய தாய், மகனை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த டி.எஸ்.பி., போலீஸாரை அப்பகுதியினா் பாராட்டினா்.