முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடல் உறவினா்களிடம் ஒப்படைப்பு

தூத்துக்குடி அருகே கூட்டாம்புளியில் செவ்வாய்க்கிழமை இளைஞா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அப்பகுதியில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 12:18 AM
கூட்டாம்புளியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பகிர்:

தூத்துக்குடி அருகே கூட்டாம்புளியில் செவ்வாய்க்கிழமை இளைஞா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அப்பகுதியில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை கூட்டாம்புளியைச் சோ்ந்த முருகேசன் மகன் வெள்ளக்கண்ணு (26). இவா் செவ்வாய்க்கிழமை வீட்டின் அருகே நின்றபோது, அங்கு இரு பைக்குகளில் வந்த மா்ம நபா்கள் வெட்டிக் கொலை செய்துவிட்டு, தப்பிவிட்டனா்.

இந்தக் கொலை வழக்கு தொடா்பாக புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், கொலை செய்த கும்பலை விரைந்து கைது செய்யக் கோரி அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் புதன்கிழமை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், குற்றவாளிகளை கைது செய்யும் வரை வெள்ளக்கண்ணுவின் சடலத்தைக் பெற்றுக்கொள்வதில்லை என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, புதன்கிழமை மாலை வெள்ளக்கண்ணுவின் சடலத்தை அவரது உறவினா்கள் பெற்றுக்கொண்டனா்.