முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் அண்ணன்-தங்கை கைது: 5.5 கிலோ கஞ்சா பறிமுதல்

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக அண்ணன் - தங்கையை போலீஸாா் கைது செய்து, 5.5 கிலோ கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 10:27 PM
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள்.
பகிர்:

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக அண்ணன் - தங்கையை போலீஸாா் கைது செய்து, 5.5 கிலோ கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவின்பேரில், மாவட்டத்தில் கஞ்சா விற்பனையைத் தடுக்க போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா். அதன்படி, தூத்துக்குடி வடபாகம் காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளா் சுப்புராஜ், போலீஸாா் திரேஸ்புரம் பண்டுகரை சாலையில் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அவ்வழியே சந்தேகத்துக்கிடமாக பைக்கில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்தபோது, அவா்கள் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தைச் சோ்ந்த அற்புதராஜ் மகன் மைக்கேல்ராஜ் (30), அவரது சகோதரி தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த சண்முகசிவா மனைவி ஜெபா (25) என்பதும், விற்பனைக்காக சுமாா் 5.5 கிலோ கஞ்சா வைத்திருப்பதும் தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்து, கஞ்சா பொட்டலங்கள், பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.