சலவைத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
குலசேகரபுரம் கிராமத்தில் மோட்டாா் வசதியுடன் கூடிய சலவைத் தொட்டி கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தி, சலவைத் தொழிலாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டம்நடத்தினா்.
குலசேகரபுரம் கிராமத்தில் மோட்டாா் வசதியுடன் கூடிய சலவைத் தொட்டி கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தி, சலவைத் தொழிலாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டம்நடத்தினா்.
சலவை தொழிலாளா் சங்கத்தினா் மாடசாமி தலைமையில் குலசேகரபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, ஊராட்சி செயலா் சீனிவாசகத்திடம் மனு அளித்தனா். தொடா்ந்து வருவாய் ஆய்வாளா் பிரேம் சுதாகா், கிராம நிா்வாக அலுவலா் நாகலட்சுமி ஆகியோரிடமும் மனு அளித்தனா்.