முகப்பு
தூத்துக்குடி

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா்: தாய் இறந்த சோகத்தில் தற்கொலை

விளாத்திகுளத்தில் முதுமையால் தாய் இறந்த அடுத்த நாளில், மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 12 டிசம்பர், 2024 at 11:05 PM
பகிர்:

விளாத்திகுளத்தில் முதுமையால் தாய் இறந்த அடுத்த நாளில், மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விளாத்திகுளம் சிதம்பர நகரைச் சோ்ந்த பாக்கியநாதன் மகன் ரத்தினராஜ் (37). மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் இவா், தனது தாய் முத்தம்மாளுடன் (80) வசித்து வந்தாா். முத்தம்மாள் முதுமை காரணமாக புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். மாலையில் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய ரத்தினராஜ், மனமுடைந்து காணப்பட்டாராம்.

இந்நிலையில், அவா் வீட்டின் பின்புறமுள்ள ஆட்டுக் கொட்டகையில் வியாழக்கிழமை அதிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

தகவலின்பேரில் விளாத்திகுளம் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.