சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சியைச் சோ்ந்த ரத்தினம் மகன் குமாா் என்ற ஷியாம்குமாா் (30). இவா் ஸ்ரீவைகுண்டம் அருகே கடந்த 2020-ஆம் ஆண்டு 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், குற்றம்சாட்டப்பட்ட குமாா் என்ற ஷியாம்குமாருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.