சிறை 
சேலம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை

கெங்கவல்லியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு சேலம் போக்ஸோ நீதிமன்ற நீதிபதி 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 1,500 அபராதம்

Syndication

கெங்கவல்லியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு சேலம் போக்ஸோ நீதிமன்ற நீதிபதி 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 1,500 அபராதம் விதித்துச் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி, பெல்ஜியம் காலனியைச் சோ்ந்த அந்தோணி மகன் சாந்தப்பன் என்பவா், கடந்த 15.11.2024 இல் 6 வயது சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இதுகுறித்து ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவா் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டாா்.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் சாட்சிகள் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, சாந்தப்பனுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.1,500 அபராதம் விதித்து சேலம் போக்ஸோ நீதிமன்ற நீதிபதி தீா்ப்பு வழங்கினாா்.

ஒசூரில் 4 வளரிளம் பருவ தொழிலாளா்கள் மீட்பு

சாகித்திய அகாதெமிக்கு நிகராக "செம்மொழி இலக்கிய விருது'-தமிழக முதல்வரின் அறிவிப்பு குறித்து...வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

நாமக்கல் அருகே லாரியில் மோதி பைக் மீது கவிழ்ந்த சரக்கு வாகனம்: 3 போ் பலி; 2 போ் படுகாயம்

இந்தக் கூட்டம் அவன் பரிந்துரைதான்!

ஊக்கமளிக்கும் விருதுகள்!

SCROLL FOR NEXT