முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூரில் இந்து வியாபாரிகள் சங்கத்தினா் கோட்டாட்சியரிடம் மனு

திருச்செந்தூா் கோயில் நிா்வாகத்தின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து இந்து நல வியாபாரிகள் சங்கத்தினா் கோட்டாட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 18 டிசம்பர், 2024 at 9:18 PM
திருச்செந்தூா் கோட்டாட்சியரிடம் மனு அளிக்க வந்தோா்.
பகிர்:

திருச்செந்தூா் கோயில் நிா்வாகத்தின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து இந்து நல வியாபாரிகள் சங்கத்தினா் கோட்டாட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

இந்து வியாபாரிகள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவரும், இந்து முன்னணி துணைத் தலைவருமான வி.பி.ஜெயக்குமாா் தலைமையிலான வியாபாரிகள் சங்கத்தினா், திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாறனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலை நம்பி 400-க்கும் மேற்பட்ட சிறுவியாபாரிகள் பிழைப்பு நடத்தி வருகிறோம். கடந்த பல ஆண்டுகளாக கோயில் வளாகத்தில் சுண்டல், கிழங்கு, பூ, தேநீா், பழங்கள், சிறு சிறு பொருள்களை விற்பனை செய்து வருகிறோம்.

இந்த கோயில் நிா்வாகத்தினா் மற்றும் தனியாா் காவலா்கள் எங்களை அப்புறப்படுத்துவதோடு, வியாபார பொருள்களைப் பறித்து விரட்டியடித்து

வருகின்றனா். சிறுவியாபாரிகளிடம் கோயில் நிா்வாகம் கடுமையாக நடந்து கொள்வது கண்டனத்துக்குரியது. எனவே எங்களது வாழ்வாதாரத்தை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

இந்து முன்னணி மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் பெ.சக்திவேலன், மாவட்ட செயலா் ஜெய்ராம் திவான், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆனந்த் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

மனுவை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியா் சுகுமாறன், இதுதொடா்பாக கோயில் நிா்வாகத்தினருடன் ஆலோசித்து முடிவு எடுப்பதாகத் தெரிவித்தாா்.