முகப்பு
தூத்துக்குடி

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க எம்எல்ஏ வலியுறுத்தல்

கோவில்பட்டி வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 25 டிசம்பர், 2024 at 11:01 PM
ஆட்சியா் க. இளம்பகவத்திடம் மனு அளித்த கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ.
பகிர்:

கோவில்பட்டி வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் க. இளம்பகவத்திடம் கோவில்பட்டி எம்எல்ஏ செ. ராஜு செவ்வாய்க்கிழமை அளித்த மனு: கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் வட்டங்கள், புதூா் ஒன்றியப் பகுதிகளில் அண்மையில் பெய்த கனமழையால் சுமாா் 1.50 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், 1.50 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த உளுந்து, பாசிப்பயறு, எள், மிளகாய் ஆகியவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியினா் மானாவாரி விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளனா்.

எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருதி, இந்த விவகாரத்தை அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்று, இயற்கைப் பேரிடா் பாதித்த பகுதிகளாக அறிவிப்பதுடன், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றாா் அவா்.