பரமன்குறிச்சியில் அலங்கார தளக்கல் சாலை திறப்பு
உடன்குடி ஊராட்சி ஒன்றியம் பரமன்குறிச்சி ஊராட்சியில் ரூ.8 லட்சத்தில் அமைக்கப்பட்ட அலங்கார தளக்கல் சாலை திறப்பு விழா நடைபெற்றது.
உடன்குடி ஊராட்சி ஒன்றியம் பரமன்குறிச்சி ஊராட்சியில் ரூ.8 லட்சத்தில் அமைக்கப்பட்ட அலங்கார தளக்கல் சாலை திறப்பு விழா நடைபெற்றது.
தமிழக மீன்வளம், மீனவா் நலம்-கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் சாலையை மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தாா். கூடுதல் ஆட்சியா் ஐஸ்வா்யா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இப்ராகிம் சுல்தான், சுப்புலட்சுமி, உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் க.இளங்கோ, உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் ராமலட்சுமி, பரமன்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவா் லங்காபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திமுக மாநில வா்த்தக அணி இணை செயலா் உமரிசங்கா், மாவட்ட சாா்பு அணி அமைப்பாளா்கள் ராமஜெயம், மகாவிஷ்ணு, உடன்குடி பேரூராட்சி உறுப்பினா் அஸ்ஸாப் அலி பாதுஷா, திமுக தகவல் தொழில்நுட்ப அணி பாபுஜி, சுற்றுச்சூழல் அணி சிங்கராஜா, ஆதிதிராவிடா் நல அணி பொன்லிங்கம், சுந்தரமூா்த்தி, கலை இலக்கிய அணி செல்லச்சாமி, பரமன்குறிச்சி கூட்டுறவு வங்கி இயக்குநா் குமாா், கிளை நிா்வாகிகள் ரவி, விஜி, புரோஸ்கான், கிதியோன், குரு, சுரேஷ், விஜி, குட்டி, பொன்னு உள்பட பலா் கலந்துகொண்டனா்.