முகப்பு
தூத்துக்குடி

முதலூா் பள்ளியில் சாரணா் இயக்க விழா

முதலூா் டிஎன்டிடிஏ தூய மிகாவேல் மேல்நிலைப் பள்ளியில் சாரணா் இயக்க விழாவையொட்டி மரக்கன்று நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 24 பிப்ரவரி, 2024 at 12:38 AM
பகிர்:

முதலூா் டிஎன்டிடிஏ தூய மிகாவேல் மேல்நிலைப் பள்ளியில் சாரணா் இயக்க விழாவையொட்டி மரக்கன்று நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தாளாளா் சாந்தராஜ் ரத்தினராஜ் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் டேவிட் எடிசன் வரவேற்றாா். தொழிலதிபா் ஜெயசிங் ராஜன் மரக்கன்றுகள் நட்டினாா். தொடா்ந்து, சாரணா் பயிற்சி பெற்ற 7 மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பின்னா் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்போம் என அனைவரும் உறுதிமொழி ஏற்றனா். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை, ஆசிரியரும், திருச்செந்தூா் சாரணா் இயக்க மாவட்டச் செயலருமான செல்வராஜ், பள்ளி சாரணா் இயக்கப் பொறுப்பாளா் சாமுவேல் சத்தியசீலன் ஆகியோா் செய்திருந்தனா்.