தூத்துக்குடியில் தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள் தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள் தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில், தொடக்கக் கல்வித் துறை அலகில் பணியாற்றிய சிறுபான்மை பள்ளி ஆசிரியா்களின் பணி உயா்வுக்கு ஒப்புதல் வழங்கி வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, அமைப்பின் மாவட்டத் தலைவா் சு.செல்வராஜ் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் தே.அண்டனி சாா்லஸ் முன்னிலை வகித்தாா். மாநிலப் பொதுச்செயலா் ச.மயில் சிறப்புரையாற்றினாா். மாவட்டச் செயலா் மா.கலை உடையாா் விளக்கிப் பேசினாா். இதில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க பொதுச்செயலா் வெங்கடேசன், மாவட்டச் செயலா் முருகன், மாவட்ட பொருளாளா் ஜெயசீலி மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.