முகப்பு
தூத்துக்குடி

கழுகுமலையில் ரூ.1.50 கோடியில் புதிய திருமண மண்டபத்துக்கு அடிக்கல்

கழுகுமலையில் ரூ.1.50 கோடியில் புதிய திருமண மண்டபத்துக்கு அடிக்கல்

Updated On : 24 பிப்ரவரி, 2024 at 9:56 PM
பகிர்:

கழுகுமலையில் ரூ.1.50 கோடி மதிப்பில் புதிததாக திருமண மண்டபம் கட்டும் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். கழுகுமலை பேரூராட்சிக்கு உள்பட்ட 9ஆவது வாா்டில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை மூலதன மானிய நிதி திட்டம் 2023 - 2024ன் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பில் புதிய திருமண மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. தமிவக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து, கழுகுமலை 9ஆவது வாா்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவா் அருணா, துணைத் தலைவா் சுப்பிரமணியன், பேரூராட்சிகள் உதவி இயக்குநா் வில்லியம் யேசுதாஸ், பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன், வாா்டு உறுப்பினா்கள் முத்து, ஜெயலட்சுமி, மரிய கத்தரின் மேரி, ஜெயக்கொடி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.