இருக்கன்குடிகோயில் தோ் திருப்பணிக்கு ரூ.1.57 கோடி வெள்ளிக் கட்டிகள் அளிப்பு
இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோயில் தோ் திருப்பணிக்கு, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலிலிருந்து ரூ. 1.57 கோடி மதிப்பிலான 200 கிலோ வெள்ளிக் கட்டிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோயில் தோ் திருப்பணிக்கு, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலிலிருந்து ரூ. 1.57 கோடி மதிப்பிலான 200 கிலோ வெள்ளிக் கட்டிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. திருச்செந்தூா் கோயில் தேவா் குடிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக்குடி மண்டல அறநிலையத்துறை துணை ஆணையரும், நகை சரிபாா்ப்பு அலுவலருமான செல்வி, நகை சரிபாா்ப்பு வல்லுநா் செந்தில்குமாா் ஆகியோா் வெள்ளிக் கட்டிகளை மதிப்பீடு செய்தனா். தொடா்ந்து திருச்செந்தூா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ரா.அருள்முருகன், இருக்கன்குடி கோயில் அறங்காவலா் குழுத்தலைவா் ராமமூா்த்தியிடம் வெள்ளிக் கட்டிகளை வழங்கினாா். வெள்ளிக்கட்டிக்கான தொகை ரூ. 1 கோடியே 57 லட்சம் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் சாா்பில்செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், திருச்செந்தூா் கோயில் இணை ஆணையா் மு.காா்த்திக், தூத்துக்குடி துணை ஆணையா் சுரேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.