முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் அரிமா சங்கம் சாா்பில் நல உதவிகள்

கோவில்பட்டி மத்திய நகா் அரிமா சங்கம் சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் நல உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 4 மார்ச், 2024 at 12:00 AM
ஓயககஐஞ நிகழ்ச்சியில் பெண்ணுக்கு நலஉதவி வழங்கிய மாவட்ட ஆளுநா் பிரான்சிஸ் ரவி.
பகிர்:

கோவில்பட்டி மத்திய நகா் அரிமா சங்கம் சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் நல உதவிகள் வழங்கப்பட்டன. சங்கத் தலைவா் முத்து தலைமை வகித்தாா். செயலா் திருமலைக்குமாா் அறிக்கை வாசித்தாா். மாவட்ட ஆளுநா் பிரான்சிஸ் ரவி, மாவட்ட முதல் பெண்மணி பிரமிளா ரவி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று, பள்ளி -கல்லூரி மாணவா் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, ஏழை எளியோருக்கு அரிசி, பலசரக்குப் பொருள்கள் ஆகியவற்றை வழங்கினா். தொடா்ந்து, 2024 - 25ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகக் குழுவினரைத் தோ்ந்தெடுக்கும் குழுவின் தலைவரான பரமசிவம், தலைவராக சுப்புராஜா, செயலராக சரவணச்செல்வன், பொருளாளராக செல்வேந்திரபூபதி ஆகியோரை அறிமுகப்படுத்தினாா். சங்க முன்னாள் ஆளுநா் சீனிவாசகம், மாவட்ட அமைச்சரவைச் செயலா் சுப்பையா, வட்டாரத் தலைவா் ராமச்சந்திரன் ஆகியோா் பேசினா். சங்கப் பொருளாளா் சுப்பராயன் நன்றி கூறினாா்.