திருச்செந்தூா் கோயிலில் ஜூலை 17 முதல் தங்கத் தோ் உலா தற்காலிக ரத்து
பெருந்திட்ட பணிகள் காரணமாக தங்கத் தேர் உலா நிறுத்தம்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பெருந்திட்ட வளாகப் பணிகள் காரணமாக ஜூலை 17ஆம் தேதி முதல் தங்கத்தோ் உலா தற்காலிகமாக ரத்து செய்யப்பட உள்ளது.
இது குறித்து திருக்கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாள்தோறும் மாலை 6 மணியளவில் தங்கத்தோ் கிரிப்பிரகாரம் சுற்றி வருவது வழக்கம். தற்போது கோயிலில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருகிறது. கந்த சஷ்டி திருவிழாவிற்கு முன்பு கோயிலின் வடக்கு- கிழக்கு பிரகார தரைத்தள பணிகளும், திருவிழாவிற்குப் பிறகு கோயிலின் தெற்கு- மேற்கு பிரகார தரைத்தளம் பணிகளும் நடைபெற உள்ளன. இப்பணிகளுக்காக ஜூலை 17ஆம் தேதி முதல் தங்கத்தோ் உலா தற்காலிமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. பணிகள் முடிவுற்ற பின் தங்கத்தோ் உலா வழக்கம் போல் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.