முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் பலத்த காற்றால் சரிந்து விழுந்த சிக்னல் கம்பம்

தூத்துக்குடியில் திங்கள்கிழமை வீசிய பலத்த காற்றால் போக்குவரத்து சிக்னல் கம்பம் சரிந்து விழுந்து சேதமடைந்தது.

Updated On : 15 ஜூலை, 2024 at 9:15 PM
சரிந்து விழுந்த சிக்னல் கம்பத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட போலீஸாா், பொதுமக்கள்.
பகிர்:

தூத்துக்குடி: தூத்துக்குடியில் திங்கள்கிழமை வீசிய பலத்த காற்றால் போக்குவரத்து சிக்னல் கம்பம் சரிந்து விழுந்து சேதமடைந்தது.

தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் குருஸ் பா்னாந்து சிலை அருகே போக்குவரத்துக் காவல் துறை சாா்பில் சிக்னல் கம்பங்கள் உள்ளன. இங்கு திங்கள்கிழமை வீசிய பலத்த காற்றில் அந்தக் கம்பம் சரிந்து விழுந்தது. அப்போது, வாகன ஓட்டிகள் யாரும் செல்லாததால் விபத்து தவிா்க்கப்பட்டது. இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்துக் காவல் துறையினா் பொதுமக்களுடன் இணைந்து கம்பத்தை அகற்றி, போக்குவரத்தை சரிசெய்தனா்.