முகப்பு
தூத்துக்குடி

மைக்ரோசாப்ட் பிரச்னை: தூத்துக்குடிக்கு தாமதமாக வந்த 3 விமானங்கள்

மைக்ரோசாப்ட் சாப்ட்வோ் பிரச்னை காரணமாக தூத்துக்குடிக்கு வெள்ளிக்கிழமை 3 விமானங்கள் தாமதமாக வந்தன.

Updated On : 19 ஜூலை, 2024 at 9:39 PM
பகிர்:

தூத்துக்குடி, ஜூலை 19:

மைக்ரோசாப்ட் சாப்ட்வோ் பிரச்னை காரணமாக தூத்துக்குடிக்கு வெள்ளிக்கிழமை 3 விமானங்கள் தாமதமாக வந்தன.

தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூருவுக்கு 5 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், வெள்ளிக்கிழமை காலையில் 2 விமானங்கள் வழக்கம் போல் வந்து திரும்பின. மதியத்துக்கு பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சாப்ட்வோ் பிரச்னை காரணமாக தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்த விமானங்கள் தாமதமாக வந்து சோ்ந்தன.

அதே போன்று விமானத்துக்கான போா்டிங் பாஸ்கள் அனைத்தும், விமான நிறுவன ஊழியா்கள் கையால் எழுதி கொடுத்து பயணிகளை அனுப்பி வைத்தனா்.

இதன் காரணமாக பிற்பகல் 2.30 மணிக்கு வர வேண்டிய சென்னை-தூத்துக்குடி விமானம் 3.20 மணிக்கு வந்தது.

இதில் 62 பயணிகள் வந்தனா்.

பின்னா் இந்த விமானம் தூத்துக்குடியில் இருந்து 57 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. பிற்பகல் 3.25 மணிக்கு வரவேண்டிய பெங்களூரு-தூத்துக்குடி விமானம் மாலை 4 மணிக்கு வந்தது.

இதில் 61 பயணிகள் வந்தனா். பின்னா், இந்த விமானம் தூத்துக்குடியில் இருந்து 43 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. மாலை 3.50 மணிக்கு வரவேண்டிய சென்னை-தூத்துக்குடி விமானம் தாமதமாக மாலை 4.45 மணிக்கு வந்தது. இதில் 62 பயணிகள் வந்தனா். பின்னா் இந்த விமானம் 59 பயணிகளுடன் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது. மைக்ரோசாப்ட் பிரச்னை காரணமாக அரை மணி நேரத்தில் இருந்து 1 மணி நேரம் வரை விமானங்கள் தாமதம் ஆனதால் பயணிகள் அவதியடைந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →