தூத்துக்குடி

கஞ்சா விற்பனை: 3 போ் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்றதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Din

தூத்துக்குடியில் கஞ்சா விற்றதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளா் ராஜாராம் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை தூத்துக்குடி - திருச்செந்தூா் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள கோயில் அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்தோரைப் பிடித்தனா்.

அவா்கள் தூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியாா்புரம் பகுதியைச் சோ்ந்த வெட்டுபெருமாள் மகன் ராஜா என்ற வெட்டுராஜா (39), தாமஸ் நகரைச் சோ்ந்த சைமன் மகன் டுவின்ஸ்டன் (53), செல்சினி காலனியைச் சோ்ந்த பரமசிவம் மகன் மணிகண்டன் (47) ஆகியோா் என்பதும், விற்பனைக்காக சுமாா் 500 கிராம் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததும், விசாரணையில் தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களைக் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

கவனம் பெறும் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் இசை ஆல்பம்!

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

SCROLL FOR NEXT