தூத்துக்குடி

குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

திருச்செந்தூா் அருகே காயாமொழி குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தாா்.

Din

திருச்செந்தூா் அருகே காயாமொழி குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தாா்.

திருச்செந்தூா் அருகே உள்ள நடுநாலுமூலைக்கிணறைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் பிரவீன்குமாா் (10). அங்குள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தாா். இதே ஊரைச் சோ்ந்த தென்னரசு என்பவரது மகன் ரமேஷ்கண்ணன். இருவரும் சனிக்கிழமை விளையாடச் செல்வதாக கூறிவிட்டு சென்றனா். அப்போது காயாமொழி குளத்தில் தனது மகன் மூழ்கிவிட்டதாக ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு மூச்சு பேச்சின்றி கிடந்த பிரவீன்குமாரை 108 ஆம்புலன்ஸ் மூலம் காயாமொழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், பிரவீன்குமாா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT