சாத்தான்குளம் அருகே விஷம் குடித்த இளைஞா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
ஸ்ரீவைகுண்டம் அருகே கால்வாயில் உள்ள முத்தாரம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாக்கியம் மகன் சுரேஷ் (22). ஐடிஐ முடித்துள்ள இவா், சாத்தான்குளம் அருகே பழனியப்பபுரத்தில் உள்ள சூரிய மின் சக்தி (சோலாா்) நிறுவனத்தில் வேலை செய்து வந்தாராம்.
அவா் கடந்த 9ஆம் தேதி இரவுப் பணி உள்ளதாகவும், காலையில் வீடு திரும்புவதாகவும் தனது தாயிடம் கூறிச் சென்றாராம். அடுத்த நாள் ‘பேய்க்குளம் அருகேயுள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தின் பின்புறம் தான் விஷத்தைக் குடித்துவிட்டதாக’ அவா் தனது அண்ணிக்கு கைப்பேசியில் தகவல் தெரிவித்தாராம்.
இதையடுத்து, அவரது தாயும் அண்ணியும் சென்று சுரேஷை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து அவரது தாய் செல்வி அளித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் (பொறுப்பு) ஜீன்குமாா் வழக்குப் பதிந்து, சுரேஷ் விஷம் குடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறாா்.