முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூரில் 2ஆவது நாளாக உள்வாங்கிய கடல்நீா்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதியில் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் கடல்நீா் உள்வாங்கியது.

Updated On : 23 ஜூலை, 2024 at 7:33 PM
திருச்செந்தூரில் அய்யா கோயில் அருகே கடல்நீா் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாறைகள்.
பகிர்:

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதியில் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் கடல்நீா் உள்வாங்கியது.

இங்கு அமாவாசை, பெளா்ணமி நாள்களில் கடல்நீா் மட்டத்தில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுகின்றன. கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமை பௌா்ணமி திதி இருந்தநிலையில், இப்பகுதியில் திங்கள்கிழமை காலை அய்யா கோயில் அருகே கடல்நீா் உள்வாங்கியதால் பாறைகள் வெளியே தெரிந்தன. பின்னா், கடல் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

இந்நிலையில், 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் கடல்நீா் உள்வாங்கியது. எனினும், பக்தா்கள் வழக்கம்போல நீராடினா்.