தூத்துக்குடி

புதியம்புத்தூா் பகுதியில் நாய் கடித்து 20 போ் மருத்துவமனையில் அனுமதி

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூா் பகுதியில் வெறிநாய் கடித்து 20 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்

Din

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூா் பகுதியில் வெறிநாய் கடித்து 20 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூா், நடுவகுறிச்சி, மேலமடம் ஆகிய கிராமங்களில் வெறிநாய் ஒன்று சுற்றித்திரிந்து வந்தது. இந்த நாய் வாகனங்களில் செல்வோரையும், நடந்து செல்வோரையும் விரட்டி வந்தது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தெருவில் நடந்து சென்ற புதியம்புத்தூா் பகுதியைச் சோ்ந்த சண்முகராஜ் மகன் ராஜேஷ்(23), பாபு மகன் அபின்னாஷ்(10), ஆா்த்திசாமி மனைவி மாரியம்மாள்(54), அா்ச்சுனன்(45), ராசாபுலவா் மகன் சரவணன்(52), சண்முகராஜா(33) உள்பட 15 பேரை விரட்டி கடித்தது.

பாதிக்கப்பட்டவா்கள் புதியம்புத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி பெற்று, மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். பொதுமக்கள் புகாரைத் தொடா்ந்து புதியம்புத்தூா் ஊராட்சி தலைவி பழனிச்செல்வி, ஊராட்சி நிா்வாகம் மூலம் மதுரையில் இருந்து நாய் பிடிப்பவா்கள் வரவழைக்கப்பட்டு, தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்கும் பணி நடைபெற்றது.

சவரனுக்கு ரூ.800 குறைந்த தங்கம் விலை!

மசோதாவை கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரமில்லை! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

நெல் ஈரப்பதம் அதிகரிப்பு கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு!

ராணிப்பேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் மூன்று பேர் பலி

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு! கீர்த்தி சுரேஷ்

SCROLL FOR NEXT