ஆடிக் கிருத்திகை: திருச்செந்தூா் கோயிலில் திரளானோா் தரிசனம்
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
இதையொட்டி, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, 108 மகாதேவா் சந்நிதி முன்பு எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதா், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மாலையில் 108 மகாதேவா் சந்நிதி முன் பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்று, சுவாமி தங்கச் சப்பரத்தில் உள்பிரகாரம் சுற்றி வருதல் நடைபெற்றது.
கிரிப்பிரகாரத்தில் தரைத்தளத்தில் கற்கள் பதிக்கும் பணி தொடங்கியுள்ளதால் தங்கத் தோ் உலா ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, திரளான பக்தா்கள் அதிகாலைமுதலே நாழிக்கிணறு, கடலில் புனித நீராடியும் காவடி, பால்குடம் எடுத்தும் நோ்த்திக்கடன் செலுத்தினா்.
ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் மு. காா்த்திக், அறங்காவலா்கள் அனிதா குமரன், பா. கணேசன், ந. ராமதாஸ், வி. செந்தில்முருகன், கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.